காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிட்னஸ் ஸோன் சார்பில் 2025 ஆண்டிற்கான மிஸ்டர். சவுத் இந்தியன் ஆண் அழகன் போட்டி காரைக்கால் கடற்கரையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியானது 6 கட்டங்களாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.