வண்டுராயன்பட்டு: சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

புவனகிரி அருகே கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (24) மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி