கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.