ஸ்ரீ முஷ்ணம்: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் கைது

ஸ்ரீ முஷ்ணம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி பால் வாங்கக் கடைக்குச் சென்றபோது, சாவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண் (32) என்பவர் அவரைப் பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மூதாட்டியின் கூச்சலைக் கேட்டு அப்பகுதி மக்கள் வருவதற்குள் அருண் தப்பி ஓடினார். இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அருணை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி