கீழக்கடம்பூர் காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழக்கடம்பூர் சுயம்பு மகாகாளியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு காளிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக பல்வேறு திரவியங்களால் காளிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர் அலங்காரம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி