பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தில், முன்விரோதம் காரணமாக விவசாயி குமார் மற்றும் அவரது மனைவி சுசீலா மீது, அவரது அண்ணன் பெருமாள் மற்றும் மகன்கள் கபிலன், கவுதம் ஆகியோர் தகராறு செய்து கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குமார், சுசீலா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிலன், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெருமாளை போலீசார் தேடி வருகின்றனர்.