கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது மேலும் மேற்கு, வடமேற்குதிசையில் நகர்ந்து விசாகப்பட்டினம்- கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று (ஆக.,31 ஏற்றப்பட்டது. இது தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தரைக்காற்று அதிகமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

தொடர்புடைய செய்தி