குமராட்சி: இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு

கடலூர் மாவட்டம் குமராட்சி வடக்கு ராஜன் வாய்க்கால் கரையில் பட்டா இல்லாத 65 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆக்கிரமிப்பின் பேரில் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பாசன பிரிவு பொறியாளர்கள் மூலமாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ மக்களை சந்தித்து மாற்று இடத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மக்களோடு முன்நின்று அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்தார். விரைவில் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய மனை இல்லாத குடும்பங்களுக்கு இலவச மனை பட்ட வழங்க ஏற்பாடுகள் செய்ய தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி