கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியத்தின் கூடுவெளிச்சாவடி பகுதியில் அரசு சார்பில் பால் பண்ணை தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் கலந்துகொண்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பால் பண்ணையை விரைந்து தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.