காட்டுமன்னார்கோவில்: வாலிபர் வெட்டிக் கொலை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் கோவில்பத்து மணவெளி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் பிரவீன் ராஜ் (24) வசித்து வருகிறார். மேலும் தனது குடும்பத்தினருக்கு உதவியாக, கிடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார். 

இந்நிலையில் வீட்டிலிருந்து சென்றவர் திடீரென அருகில் உள்ள கருவ மரத் தோப்பு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலையான பிரவீன்ராஜ் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் கண்ணீர் கதறல் போராட்டம் நடத்தினர். நீண்ட நேரமாக இறந்த பிரவீன்ராஜ் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் தடுத்தனர். மேலும் கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், 

அதுவரை உடலை எடுக்கக் கூடாது என தடுத்தனர். இதனால் பரபரப்பு பதற்றம் ஏற்பட்டது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. அப்பகுதியில் கஞ்சா விற்பனையும், கள்ளத்தனமான மது விற்பனையும் அதிக அளவில் இருப்பதாகக் கூறும் அப்பகுதி கிராம மக்கள் போதை ஆசாமிகள் கைவரிசையா, அல்லது கஞ்சா ஆசாமிகளின் வேலையா என தெரிவித்தும் வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி