காட்டுமன்னார்கோவில்: மகன் மாயம் - தந்தை புகார் அளிப்பு

காட்டுமன்னார்கோவில் அண்ணா நகரைச் சேர்ந்த பி.இ பட்டதாரி விக்னேஷ் (31), கடந்த ஆண்டு 6 லட்சம் ரூபாய் கடன் பெற்று வெளிநாடு சென்றார். அங்கு வேலை பிடிக்காததால் சில மாதங்களில் நாடு திரும்பி திருச்சியில் வேலை செய்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை தங்கமணி அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி