நேற்று திருச்சியில் நடைபெற்ற "மதச்சார்பின்மை காப்போம்" பேரணிக்கு புறப்பட்டவர்களில், காட்டுமன்னார்கோயில் தொகுதிக்கு உட்பட்ட எய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தது நம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவல் கிடைத்தவுடன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ உடனடியாக திருச்சி சுகம் மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்னர், உடலை பெற்றுக் கொள்ள கட்சியின் முன்னணி தோழர்களுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.