காட்டுமன்னார்கோவில்: மதுபானம் விற்றவர் கைது

காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் பெரிய தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜோதி பாஸ் (34), வீட்டில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி