காட்டுமன்னார்கோவில், தொரப்பு பெரிய தெருவைச் சேர்ந்த மலையப்பன் (36) என்ற கூலித் தொழிலாளி, மது அருந்தும் பழக்கத்தால் வேலைக்குச் செல்லாமல் சுற்றி வந்துள்ளார். கடந்த மே 24 அன்று, மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த அவரை மனைவி தனலட்சுமி மற்றும் உறவினர்கள் தட்டிக் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த மலையப்பன், பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.