முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, காட்டுமன்னார்கோயில் ஒன்றிய நகர திமுக இளைஞர் அணி சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. பாண்டிச்சேரி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இணைந்து நடத்திய இந்த முகாமினை, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.