காட்டுமன்னார்கோவில்: ஏரியில் 4 வயது சிறுவன் உடல் மீட்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கந்தகுமாரன் கிராமத்தில் உள்ள வீராணம் ஏரிகரை ஓரத்தில் அடையாளம் தெரியாத சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுவன் சடலமாக மிதந்ததை நேற்று மதியம் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். 

இதனையடுத்து அருகே உள்ள புத்தூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி விஜிகுமார் மற்றும் புத்தூர் காவல் துறையினர் தண்ணீரில் அழுகிய நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுவனின் சடலத்தை ஆம்புலன்ஸ் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் யார்? கொலையா அல்லது ஏதாவது காவல் நிலையத்தில் சுமார் 3 வயது முதல் 5 வயது வரையிலான சிறுவன் காணவில்லை என புகார் ஏதேனும் உள்ளதா? மேலும் இந்த பகுதியில் வீராணம் ஏரிகரையோரத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலமா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி