கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள 20 வயது இளம்பெண் இவருக்கும் லால்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு இருவரும் சந்தித்தனர். அப்போது சிறுவன் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கூறி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்த இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வாக்குறுதி கூறி இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 18 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.