காட்டுமன்னார்கோவில்: மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 2 வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்ததாக நாட்டார்மங்கலம் கிராமம் காமராஜர் தெருவை சேர்ந்த கலியபெருமாள் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல் வீராணநல்லூர் கிராமத்தில் உள்ள கிழக்குத் தெருவை சேர்ந்த தீனா என்பவரையும் வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்ததாக காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி