கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த உறுதிமொழியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் N. கோடீஸ்வரன், V. ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளர் P. அப்பாண்டைராஜ், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலக நிர்வாக அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இது கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான ஒரு முக்கிய படியாகும்.