நடிகர் விஜய் ஊழல் பற்றி பேசுவது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் நடிக்கும் படத்திற்கு வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக கூற முடியுமா என்றும், முளைத்து மூன்று இலை வருவதற்குள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர்கள் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.