கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் மேலப்பாளையூரைச் சேர்ந்த 71 வயதான பூங்கோதை, கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.