கடலூர் 9 தொகுதி: 132 மனுக்கள் ஏற்பு - 128 மனுக்கள் தள்ளுபடி

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 260 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 128 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 132 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை (9 ஆம் தேதி) கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி