கடலூர் மாவட்டம் கீழ செங்கல்பட்டைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் அசோக்ராஜ் (39) என்பவரிடம், ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் பணிபுரிந்தபோது கண்டமங்கலம் இளவேந்தன் (25) மற்றும் மணிகண்டன் (22) ஆகியோர் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அசோக்ராஜ் அளித்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் இளவேந்தன் மற்றும் மணிகண்டனை கைது செய்தனர்.