காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த பாலமுருகன் ராயபுரத்தில் உள்ள மீன் விற்பனை கடையில் வேலை செய்து வந்தார். நேற்று(அக்.2) விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டு பயணம் செய்துள்ளார்.

ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த போது பாலமுருகனின் கால் நடைமேடையில் மோதியது. இதில் கால்கள் துண்டாகி நடைமேடை மற்றும் ரயிலின் இடையில் சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார்.

உடனே ரயில்வே காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி