கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு மகளிர் பள்ளி மேலாண்மை குழுவினர் சிறப்பு கூட்டம் பள்ளியில் நடைபெற்றது. குழுவின் தலைவர் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டு நாளை பள்ளி துவங்கும் முன்பு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுவான பள்ளியின் வளர்ச்சி, கழிவறை சீர்செய்வது, போதுமான வகுப்பறை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.