கடலூர்: மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்பு படை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 அணியினர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலும், 2 அணியினர் கடலூர் மாவட்டம் கடலூர் நகராட்சிக்கு அருகிலும் முன்னெச்சரிக்கையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி இன்று (புதன்கிழமை) முதல் விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, மாநில மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி