கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று (மே 19) இரவு பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.