கடலூர்: உப்பனாற்றில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

கடலூர் துறைமுகம் அடுத்த சோனங்குப்பத்தை சேர்ந்த சைமன் மீனவர். இவர் நேற்று காலை தனது படகை எடுத்துக் கொண்டு உப்பனாற்றில் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது படகில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து இறந்தார். கடலூர் துறைமுகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி