கடலூர்: கல்லூரி மாணவி கர்ப்பம்; வாலிபர் மீது வழக்கு

கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் சுரேந்திரன் (19), 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து, அவர் வீட்டில் தனியாக இருந்தபோது ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி 5 மாத கர்ப்பமாக உள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றபோது இந்த விவரம் தெரியவந்தது. மாணவி அளித்த புகாரின் பேரில், கடலூர் மகளிர் போலீசார் சுரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி