கடலூர்: ஒரே நாளில் குவிந்த மனுக்கள்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 740 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி