சிதம்பரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்பு போராட்டம்

சிதம்பரம் நகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரால் இடிக்கப்பட்ட 850க்கும் மேற்பட்ட எளிய மக்களின் வீடுகளுக்கு இதுவரை மற்று இடம் வழங்கப்படாத சூழலில் பல முறை இம்மக்களுக்காகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீண்டும் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ். ராஜா, சிதம்பரம் நகர் மன்ற துணைத்தலைவர் எம். முத்துகுமரன், மாவட்ட குழு உறுப்பினர் எம். ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகிக்க, கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மூத்த தலைவர் தோழர் மூசா, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் உளிட்டோருடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட காத்திருப்பு போராட்டம் நடந்தது. பின்பு சிதம்பரம் சார் ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி