வரகூர்பேட்டை: ஆம்புலன்ஸ்க்கு வழி விட சொன்ன வேட்பாளர்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரி, வரகூர்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஆம்புலன்ஸ் வந்தது. உடனடியாக தனது பிரச்சாரத்தை நிறுத்தி, 'பிரச்சாரத்தை அடுத்ததாக பார்த்துக்கொள்ளலாம், முதலில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்கள்' என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆம்புலன்ஸ் சென்ற பிறகு, மக்களுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி