தில்லைவிடங்கன்: ரேஷன் கடையை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்கம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் தில்லைவிடங்கன் கிராமம் பாழடைந்து கிடக்கும் ரேஷன் கடையை சீரமைத்து தர கோரியும், பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் கோதுமை, மண்ணெண்ணெய் வழங்க கேட்டும், தரமான அரிசி வழங்கிட கேட்டும், தில்லைவிடங்கன் நியாய விலை கடைக்கு தனி ஊழியர் பணியமர்த்தி அனைவருக்கும் பொருட்கள் உடனடியாக கிடைக்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராம பொதுமக்கள் இணைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி