இந்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எம்பி நேரில் சந்தித்து சிதம்பரம், அரியலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனுவை அளித்தார்.
இந்த கோரிக்கை நிறைவேறும் என்கிற நம்பிக்கை அளிக்கும் வகையில் அவரது அணுகுமுறை அமைந்தாகவும் தெரிவித்துள்ளார்.