கடலூர் அருகே துப்பாக்கிச் சூடு

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி வல்லம்படுகை நவீன் என்பவரை நேற்று அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் காவலர்களை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்நிலையில், அவரது ஆயுதத்தை மீட்க இன்று (நவ.23) காலை மாரியப்பா நகர் பகுதிக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றபோது, மீண்டும் கத்தியால் வெட்ட முயன்றதால் அவரை சுட்டுப் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி