இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் தொடர்ச்சியாக இன்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுச்சத்திரம் கனரா வங்கி அருகில் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் வழங்கினார்.
உடன் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், கிருஷ்ணகுமார், ராஜாராமன், ஆர். மணிவண்ணன் ஒன்றிய பேரூர் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.