விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் சிதம்பரம் எம்பி திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் பாஜக ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை திடீரென உயர்த்தியதைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய ஒன்றிய அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.