பரங்கிப்பேட்டை: படகில் இருந்து கடலுக்குள் விழுந்தவர் சாவு

கடலூரைச் சேர்ந்த வெற்றிவேல், தனது படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, சக மீனவரான கோபிகரன் திடீரென கடலில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற மீனவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி