கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பு. முட்லூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் (35) மற்றும் மணல் மேடு கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (45) இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 21 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் குமரேசன் கட்டையால் சிவகுருநாதனைத் தாக்கியுள்ளார். இது குறித்து சிவகுருநாதன் அளித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்தார்.