பண்ருட்டி போலீசார் வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் வேகமாக வந்த ஒருவரை மறித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கொட்டி கோனாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜதுரை (45) என்பதும், சாந்தகுமாரின் மோட்டார் சைக்கிளைத் திருடியதும், மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.