கடலூர் மாவட்டம் கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலி மற்றும் போலீசார் கோவிலாம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முருகன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகராஜன் (26) என்பவர் கையில் கட்டையுடன் பொதுமக்களை அச்சுறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரவுடியான சண்முகராஜனை போலீசார் கைது செய்தனர்.