கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் வழக்கமாக கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று (மே 17) பிராய்லர் கோழி கிலோ ரூ. 300, நாட்டுக்கோழி கிலோ ரூ. 500, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800 என விற்பனை செய்யப்பட்டது. மீன் வகைகளில், வஞ்சரம் மீன் கிலோ ரூ. 1300, வௌவால் மீன் கிலோ ரூ. 500, சங்கரா மீன் கிலோ ரூ. 550, காரை மீன் கிலோ ரூ. 300 என விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.