கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் காவல் நிலைய திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஸ்டீபன் என்பவரை கைது செய்தனர். வழக்கு சொத்தை கைப்பற்ற முயன்றபோது முதல் நிலை காவலர் ஞானபிரகாசம் என்பவரை ஸ்டீபன் கத்தியால் வெட்டினார். காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் நிலை காவலர் ஞானப்பிரகாசம் என்பவரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.