கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 11 ஆம் தேதி காலை 8. 30 மணி நிலவரப்படி பெலாந்துறை 65. 6 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 64 மில்லி மீட்டர், லால்பேட்டை 62 மில்லி மீட்டர், புவனகிரி 55 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 42 மில்லி மீட்டர், சிதம்பரம் 32. 3 மில்லி மீட்டர், விருத்தாசலம் 30 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 28. 8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.