கடலூருக்கு நாளை கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கடலூர் மாவட்டத்திற்கு நாளை (16.11.2025) கனமழை முன்னிட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் 1077 (கட்டணமில்லா) மற்றும் 04142 – 220 700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி