கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாலையில் காரைக்காடு அருகே எதிர்பாராத விதமாக கார் - வேன் - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10 பேர் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.