கடலூர்: மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கவும் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி