கடலூர்: ஆபத்தில் உதவி... பாராட்டிய எஸ்பி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் குமாரகுடி வளைவு பாலத்தில் கீழே விழுந்து அடிபட்டு கிடந்த தகவல் கிடைத்தவுடன் காவல் ஆய்வாளர் சேதுபதி, உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து வாகனப் பணியில் இருந்த காவலர் சபாபதி, காவலர் இளங்கதிரவன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

அங்கு காயம்பட்ட நபர்களை உடனடியாக ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உதவி மேற்கொண்டனர். விபத்தில் அடிபட்டு கிடந்தவர்களை காவல் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவிய காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி