கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று (பிப்ரவரி 7) அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.