கடலூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3ஆவது பிரமாண்ட புத்தகத் திருவிழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன.